பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் சமத்துவக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்து போட்டி.
6 months ago

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை இந்தக் கட்சி ஆதரித்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில், கிளிநொச்சி தொகுதியில் சஜித் பிரேமதாஸ அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து போட்டியிட அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மு. சந்திரகுமார் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சமத்துவக் கட்சிக்கு 5 வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு 4 வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
