எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு எதிர்வரும் 25ஆம் திகதி - வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள் பொதுத் தேர்தலை கண்காணிக்க வருவார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியம், பொது நலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்தும் நாட்டிலேயே தங்கியுள்ளன.
பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அவர்களுடன் மேலதிகமாக ஒரு குழுவும் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.