இந்தியாவில் மீண்டும் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனும் அவர் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
மலையகத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் இந்த விஜயத்தின்போது ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார்.
மேற்படி சந்திப்புக்களின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெய்சங்கர் இந்த விஜயத்தின்போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
