இந்து தலங்களை பௌத்த மயமாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம்- மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடல்

5 months ago


இந்து தலங்களை பௌத்த மயமாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம்- மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடல்

இந்து தலங்களை பௌத்த மயமாக்கும் நடவடிக்கை யில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் மற்றும் அது தொடர்பான இடங்களுக்கு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அது சாடியுள்ளது.

தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள். இராணுவம், பொலிஸார் இணைந்து மத சிறுபான்மையினரின் கலாசாரம். வழிபாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மூலோபாயத்தை முன்னெ டுக்கின்றனர்.

இவர்கள் தமிழர்கள் பெரும்பான் மையாக வாழும் வடக்கு, கிழக்கில் சிங்களபௌத்த குடியேற்றங்களை ஊக்குவிக்கின்றனர். இது பெரும்பான்மையான தமிழ், முஸ்லிம் மக்களின் மத உரிமை மற்றும் சொத்துகளுக்கு தீங்கு விளைவிக்கப்படுகின்றது.

26 வருட ஈவிரக்கமற்ற உள்நாட்டு போரின் பின்னர் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் 2009 இல் தோற்கடித்தது முதல், வடக்கு - கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள படைத் தரப்பினரும் செயல்பாட்டாளர் குழுக்களை கண்காணிப்பது, உடன்பட மறுத்தலை ஒடுக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மத சுதந் திரத்துக்கான உரிமையை அதிகளவில் மீறிவருகின்றனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள இந்து ஆல யங்களில் பௌத்த குருமாருடன் இணைந்து அதிகாரிகள் ஆலய விக்கிரகங்களை சேதப்படுத்தியுள்ளனர் அல்லது அகற்றியுள்ளனர். வழிபாட்டில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தியுள்ளனர் - தாக்கி யுள்ளனர் - கைது செய்துள்ளனர் - அவர்களின் வழிபாட்டு உரிமையை மறுத்துள்ளனர்.

நில அபகரிப்பின் மூலம் தமிழ், முஸ் லிம் மக்களின் சொத்துகளை அவர்கள் (அரசாங்கம்) இலக்கு வைத்துள்ளனர். சிறுபான்மை இனத்தவர்களின் கலாசார, மத அடையாளங்கள் மீதான அதிகரித்த ஒடுக்குமுறைகளால் நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் உரத்த குரலில் பேசுவது போலியானதாக - வெறுமையானவையாக தோன்றுகின்றது.

ஏனைய மக்களை பலிகொடுத்து சிங்கள பௌத்த தேசியவாதத்தை ஊக்குவிக்கும் மலினமான இந்த நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் அவசியம் - இவ்வாறு மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக் கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 

அண்மைய பதிவுகள்