வவுனியாவில் கிராமசேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்தத் தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தம்
3 months ago

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராமசேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்தத் தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கிராமசேவகராக நியமனம் பெற்ற ஒருவர் தனது மூன்று வருட நிறைவில் பதவியை உறுதிப்படுத்த வேண்டும்.
அந்தப் பதவியில் மூன்று வருடம் கடந்தும் தாமதாக கடந்த வருடமே குறித்த கிராம அலுவலர் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்போது குறித்த கிராம அலுவலர் நியமனத்திற்காக சமர்ப்பித்த க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை பரீட்சை திணைக்களத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இதனையடுத்து அந்தக் கிராமஅலுவலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
