
மட்டக்களப்பு அக்கரைப்பற்று - பாலமுனை பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கறைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, அவருடன் காரில் பயணித்த மேலும் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் 34,43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
