முல்லைத்தீவில் கனியவள மணல் அகழ்வு ஆய்வுப் பணி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

5 months ago


கனியவள மணல் அகழ்விற்கான முன்னாயத்த ஆய்வு பணி மேற்கொள்வதற்காக கனிய மணல் திணைக்களத்தினருடன் இணைந்த சில திணைக்களங்களின் நடவடிக்கைக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆய்வு பணி கைவிடப்பட்டு அவ்விடத்திலிருந்து சென்றிருந்தனர்.

மீண்டும் பிறிதொரு இடத்தில் குறித்த திணைக்களம் உள்ளிட்ட குழுவினர் கனிய மணல் ஆய்வில் ஈடுபட சென்றபோது அங்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, திணைக்களத்தினருடன் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்தும் குறித்த ஆய்வு நடவடிக்கையும் கைவிடப்பட்டிருந்ததுடன் தாம் அவ்விடத்திலிருந்து செல்வதாக கூறி குறித்த ஆய்வு திணைக்களத்தினர் சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் கனிய வள மணலை அகழ்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (31.07.2024) முல்லைத்தீவு மாவட்ட. செயலகத்தில் இடம்பெற்றதனை தொடர்ந்து இரகசியமான முறையில் முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் இருந்து தீர்த்த கரைவரை ஆய்வு பணியினை மேற்கொள்ள சென்றிருந்தார்கள்.

குறித்த ஆய்வு பரிசோதனையை மேற்கொள்வதற்காக கடலோர பாதுகாப்பு திணைக்களம், கனிய மணல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்களம், நீர் வள முகாமைத்துவத்தினர், புவிசரிதவியல் திணைக்களம் இவர்களுடன் இணைந்து கரைதுரைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர், ஆகியோர் இணைந்து ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக குறித்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடதக்கது.

அண்மைய பதிவுகள்