ஜோபைடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டும் என்று ஜனநாயக கட்சி யினர் மாத்திரமன்றி, அவருக்கு நிதி வழங்கும் முக்கிய நபர்களும் அழுத் தங்களை பிரயோகித்து வருகின்ற னர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்கொள்வ தற்கான தகுதியுடன் ஜோ பைடன் உள்ளாரா என்பது குறித்து மூடிய சந்திப்பொன்றை ஜனநாயக கட்சி யினர் நடத்தியுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என 7 ஆவது காங்கிரஸ் உறுப்பினரும் கோரியுள்ள நிலையில், ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இறுதியாக நடத்தப்பட்ட விவாதத் தின் போது வார்த்தைகளில் தடுமாற் றத்தை வெளிப்படுத்தியமை ஜோ பைட னின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடு வதற்கான தகுதித்தன்மையை கேள் விக்குட்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஜனநாயக கட்சி யின் மூத்த செனட் உறுப்பினரான சக்ஷுமர், ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு ஜோ பைடன் உடற் தகுதியுடன் உள்ளார் என்று தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
தென் கரோலினா உறுப்பினரான ஜிம் கிளைபேர்னும் ஜோ பைடனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டி யில் ஜோ பைடன் தொடர்ந்தும் இருப் பது குறித்து ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்று இல்லினோய்ஸ் மாநில உறுப்பினர் டிக் டர்பின் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பு இடம்பெற்று சில மணி நேரத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட நியூ ஜேர்சி மாநில உறுப்பினர் மிக்கி ஷெரில், ஜோ பைடன் போட்டியில் இருந்து விலக வேண் டும் என வெளிப்படையாக கூறியுள்ளார்.