ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு, புதிய ஜனாதிபதி நீதி வழங்க வேண்டும் என மகள் அஹிம்சா வேண்டுகோள்.
3 months ago
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு, புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதி வழங்க வேண்டும் என, லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக உண்மையை பேசியமைக்காக, நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எனது தந்தையின் உயிருக்காக, நீதியை பெற்றுக்கொள்வது குறித்து, நானும் எனது குடும்பமும் உறுதியாக உள்ளோம்.
அதிகாரத்தின் முன்னால் உண்மையை பேசியமைக்காக, 15 வருடங்களுக்கு முன்னர், நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எங்களின் தந்தைக்கு, நீதியை பெற்றுக்கொள்வது குறித்து, நானும் எனது குடும்பமும் தளராத உறுதியுடன் காணப்படுகின்றோம். என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க குறிப் பிட்டுள்ளார்.