காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி நாங்கள் போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரவில்லை. மனுவல் உதயச்சந்திரா தெரிவிப்பு.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி நாங்கள் கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரவில்லை.எனவே இம்முறை இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எமக்கான நீதியைப் பெற அணிதிரண்டு குரல் கொடுப்போம். என்று மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாக சர்வதேசத்திடம் குரல் எழுப்பி வருகிறோம்.
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க அனைவரும் அணிதிரள வேண்டும். ஜனாதிபதியாக ஆட்சிக்கு யார் வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை- என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
