கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

3 months ago


கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச மாணவர் அனுமதி 45 வீதமாக குறைந்துள்ளது எனத் தெரி விக்கப்படுகிறது.

கனடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். மாணவர் அனுமதி தொடர்பான விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னர் இந்த தகவல் வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இவ்விடயம் தொடர்பான மத்திய அரசாங்கத்தின் கொள்கை களை மீள் பரிசீலனை செய்ய வேண் டிய அவசியம் எழுந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சர்வதேச மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்வதை வரையறுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

எதிர்வரும் இரண்டு ஆண்டு கால பகுதிக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி 35 வீதத்தினால் குறைக்கப்படும் என குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்திருந்தார்.

இந்த வரையறைகள் காரணமாக இந்த ஆண்டில் சர்வதேச மாணவர் களின் அனுமதி சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கனடிய கல்லூரிகள் மற்றும் வேறும் கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதி மேலும் குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.