யாழ், வவுனியாவில் அரச உயர் அதிகாரிகளின் சொத்து விவரங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆராய வேண்டும்.-- சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

1 month ago



யாழ்.வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளின் சொத்து விவரங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆராயப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இங்கு பணியாற்றும் உயர் அதிகாரிகள் பலர் திடீரென செல்வந்தர்களாக                மாறியிருப்பதுடன் முகவர்களின் பெயர்களில் சொத்துகள்      குவித்துள்ளனரா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றது.

அத்துடன் பிரதேச செயலகங்களில் மக்கள் தமது காணி தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்வதுடன் காலம் கடத்தி மக்களை அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பது.

புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் மிகவும் இலகுவில் ஓரிரு நாளில் தமது காணி              விடயங்களை சீராக்க கூடியதாக உள்ளதையும் பொது மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் தற்போதைய அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக கூறிவரும் நிலையில் வவுனியாவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பணிக்கு இணையும் போது வழங்கிய சொத்து விவரங்களையும் தற்போது அவர்களின் சொத்துக்களையும் ஆராய வேண்டும் அரசாங்கத் திணைக்களங்களில் பொது மக்களிடம் இலஞ்சம் பெறல் மற்றும் மக்களை அலைக்கழிக்கும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

அண்மைய பதிவுகள்