அமெரிக்காவில் 6 மாத குழந்தையை எலிகள் கொடூரமாக கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

3 months ago


அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த டேவிட் ஸ்கோனாபாம் என்பவரின் 6 மாத குழந்தையை எலிகள் கொடூரமாக கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலிகள் குழந்தையின் உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்ததால் முகம் உட்படப் பல உடல் பாகங்கள் சிதைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஓராண்டாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் எலிகடியால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குழந்தையை ஒழுங்காக பராமரிக்காதது வீட்டிலிருந்த எலிகளை அகற்றாமல் குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டிற்காக இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.