மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவீரர் துயிலும் இல்ல துப்புரவு பணியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுள்ளது
2 months ago
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் நடவடிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்துள்ளனர்.
இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளதை முன்னிட்டு மட்டக்களப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக முன்னணி தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தலைமையில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை கண்டலடி, தரவை, தாண்டியடி, மாவடி முன்மாரி ஆகிய நான்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன.