யாழில் மேலும் மூன்று இடங்களில் வளித்தரக் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன

3 weeks ago



யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்களில் வளித்தரக் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்று மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வளித்தரக் கண்காணிப்பு நிலையம் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக இயங்காத நிலையில், அதனை மீளச் செயற்படுத்துவதற்கு கொழும்பிலிருந்து நேற்று வருகை தந்திருந்த குழு திருத்தப் பணிகளை முன்னெடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்தே, யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள மூன்று காற்றுத்தரக் கண்காணிப்பகங்களுக்கு மேலதிகமாக, மேலும் மூன்று காற்றுத்தரக் கண்காணிப்பகங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சாவகச்சேரியிலும், வலிகாமத்தின் இரு பகுதிகளிலும் இந்தக் கண்காணிப்பகங்கள் அமைக்கப்படவுள்ளன என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணத்தின் காற்றுத்தரம் தொடர்பில் பல்வேறுபட்ட போலித் தகவல்கள் பேஸ்புக்கில் பரப்பப்படுகின்றன என்றும், உத்தியோகபூர்வ அறிவித்தலைப் பின்பற்றுமாறும் பொதுமக்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன.

அண்மைய பதிவுகள்