விடுதலைப் புலிகளின் படங்கள், இலச்சினையைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த முடியாது.-- அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு

1 month ago



உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதற்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படுத்தப்படமாட்டாது.

ஆனால் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் படங்கள், இலச்சினைகளைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த இடமளிக்கப்படமாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால                தெரிவித்திருக்கின்றார்.

நேற்று ஊடகம் ஒன்று மாவீரர் தினம் தொடர்பாகக் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பினர் இதற்கு இடையூறு எதையும் ஏற்படுத்தவில்லை. இது தெரியுமா?

அல்லது நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?" என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும், மலையமாக இருந்தாலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்குரிய உரிமை உள்ளது.

இதற்கு நாம் எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தவில்லை. தடை செய்யப்பட்ட தமது பிள்ளைகளை நினைவுகூரும்போது அவர்கள் பயங்கரவாதிகளை நினைவு       கூருகின்றனர் எனக் காட்ட முற்படவும் கூடாது.

ஆனால் புலிகள் அமைப்பு தடை. செய்யப்பட்ட அமைப்பாகும். அவ்வமைப்பின் இலச்சினை, படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது – என்றார்.