பங்களாதேஷில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைவர்கள் 20 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு.

5 months ago


பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்டதாக கூறப்படும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைவர்கள் 20 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

சில வன்முறையாளர்கள் 15 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அவாமி லீக் உறுப்பினர்களுக்கு சொந்தமான பல வீடுகள், வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களை அழித்து சூறையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நுண்கடன் துறையில் நிபுணரான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இன்று (08) பங்களாதேஷில் நியமிக்கப்படவுள்ளது.