அநுராதபுரம் -பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் நேற்று முன்தினம் இரவு பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை

1 month ago



அநுராதபுரம் -பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் நேற்று முன்தினம் இரவு பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை 

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயது முதிர்ந்த பெண்ணே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.