கனடாவில் 90 ஆண்டுகளுக்கு முன்னர் தமது தந்தையினால் உருவாக்கப்பட்ட விமானத்தை அவரது இரண்டு மகள்களும் அண்மையில் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
ஒன்றாரியோவின் குயிலெப் பகுதியில் இந்த விமானத்தை பார்வையிட்டுள்ளனர்.
ரோபட்டா லுயோ மற்றும் அவிலின் சுயிவொங் ஆகிய இருவரும் தமது தந்தை 90 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய விமானத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.
1935 ஆம் ஆண்டு ராபர்ட் மற்றும் டொமி வொங் ஆகிய சகோதரர்களினால் தங்களது பதின்ம வயதில் விமானம் ஒன்று தயாரிக்கப்பட்டது.
சஞ்சிகை ஒன்றில் காணப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விமானம் உருவாக்கப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாங்குவார் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த இரண்டு சகோதரர்களும் விமானத்தை தயாரித்திருந்தனர்.
இந்த விமான தயாரிப்பு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மிகப்பெரிய ஓர் அனுபவமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானி அனுமதி கிடைப்பதற்கு முன்னதாகவே ராபர்ட் விமானத்தை உருவாக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபர்ட் மற்றும் டொமி ஆகியோர் சென்ட்ரல் ஏர்வேஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் அவரது மகள்கள் தற்பொழுது தங்களது தந்தையாரின் விமான உற்பத்தியை நேரில் பார்வையிட்டுள்ளனர்.