யாழ்.நவாலிப் பகுதியிலுள்ள பொலிஸ் வீட்டில் நகைகள், பணம் திருடப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது

2 months ago


யாழ்.நவாலிப் பகுதியிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து மூன்றரைப் பவுண் தங்க நகையை யாழ்.பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மீட்டனர்.

குளியலறை ஊடாக வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவற்றை திருடிச் சென்றனர்.

இந்த திருட்டு தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, பிரதான சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார்          ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்