பலஸ்தீன மக்களை ஹமாஸ் போராளிகள் சங்கிலியால் கட்டிவைத்து சித்திரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டது.
பலஸ்தீன மக்களை ஹமாஸ் போராளிகள் குழுவினர் சங்கிலியால் கட்டிவைத்து சித்திரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.
பலஸ்தீன மக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ 2018 முதல் 2020ஆம் ஆண்டுக்குள் வடக்கு காஸா பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
கண்காணிப்புக் கமராவில் பதிவான வீடியோ காட்சிகள் இவை என்று தெரிவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவலை நியூயோர்க் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ளது.
47 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் முகாமின் கூரைப் பகுதியில் இருந்து சங்கிலியால் பொதுமக்கள் கை, கால்கள் கட்டப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
மேலும் ஹமாஸ் அமைப்பினர் தங்களது முகங்களை முகமூடியால் மூடிக் கொண்டு அவர்களிடம் கேள்வி எழுப்புவதும், அடித்து துன்புறுத்துவதும் பதிவாகியுள்ளது.