ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளருக்காக பிரசாரத்தில் ஈடுபடுகின்றமை சட்ட முரண்! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மற்றொரு வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் செய்வது தேர்தல் சட்டத்துக்கு முரணானதெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒரு சிலர் பிற வேட்பாளர்களுக்காக அல்லது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் முற்றிலும் தேர்தல் சட்டத்துக்கு முரணானவை. அவ்வாறு சட்ட ரீதியற்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சட்ட விரோதமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமிடத்து இரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரி வித்துள்ளது.