குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முதல் தடவை விசாரணைக்கு வந்ததாக பந்துல குணவர்தன தெரிவிப்பு

தனது வாழ்க்கையில் முதல் முறையாக அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருள் கொள்வனவு தொடர்பான விசாரணைக்கு நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய போதே அவர் இதனை கூறினார்.
கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில், கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி கடந்த சில நாட்களாக, கடந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல அமைச்சரவை அமைச்சர்கள், வாக்குமூலங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
