ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு

2 months ago



ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இவ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

அம்பாறையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்ப ராஜா,சபாபதி நேசராசா, கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை, கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன், சிந்தாத்துரை துரை சிங்கம், சுப்பிரமணியம் தவமணி, தியாகராஜா கார்த்திக், ராஜகுமார் பிரகாஷ், செல்லத்தம்பி புகனேஸ்வரி, பாலசுந்தரம்                பரமேஸ்வரன் ஆகியோர் சுய      அறிமுகம் செய்து உரையாற்றினர்.