வன்னி மாவட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் எம்.பி து.ரவிகரனால் மகஜர்கள் கையளிப்பு
4 hours ago
வன்னியில் காணப்படும் சில அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோரிடமே இவ்வாறு மகஜர்கள் கையளிக்கப்பட்டன.