2024 இல் யாழ். மாவட்டத்தில் 185 பேர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர்.-- யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவிப்பு
3 days ago
2024ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 185 பேர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் பதிவான உயிர் மாய்ப்புக்களின் சராசரி தேசியத் தரவுகளையும் விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு லட்சம் பேரில் 15 பேர் உயிர் மாய்க்கின்றனர் என்பதே தேசியத் தரவாக உள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அது இரட்டிப்பு எண்ணிக்கையாக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.