இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் உயிரிழப்பை அடுத்து மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

3 months ago


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, மத்திய கிழக்கில் பெரும் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலிலேயே நஸ்ரல் லாஹ் கொல்லப்பட்டார்.

எனினும், அவர் கொல்லப்பட்டமையை                    நேற்றையதினமே இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது.

ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் நேற்று மாலை ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மரணத்தை உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பு 1200 பேரை கொன்றது. அத்துடன், 253 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் படையெடுத்தது.

இதற்கு பதிலடியாக லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியது.

இதைத் தொடர்ந்து இந்த மாதத் தொடக்கத்தில் ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்தது.

இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார்.

இஸ்லாமின்ஷியா பிரிவு        மதகுருவான நஸ்ரல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் போராட்ட அமைப்பை இரு தசாப்த காலத்துக்கு மேலாக வழிநடத்தியவர்.

1982ஆண்டு ஹிஸ்புல்லாஹ் அமைப்பில் இணைந்த அவர், நீண்டதூரம் தாக்கும் ஏவுகணைகள் மூலமாக இஸ்ரேலை தாக்கி அதனை நிலைகுலையச் செய்திருந்தார்.

இது அந்த அமைப்புக்குள் அவருக்கு செல்வாக்கை அதிகரித்தது. 1992ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் அப்பாஸ் அல் முஸாவி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக ஹசன் நஸ்ரல்லாஹ் தெரிவானார்.

இவரின் தலைமையின் கீழ் ஹிஸ்புல் லாஹ் நடத்திய தாக்குதல்களில் சுமார் 18 ஆண்டுகள் தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த இஸ்ரேல் படைகள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியிருந்தன.

இதையடுத்து, மத்திய          கிழக்காசியாவின் பலமிக்க தலைவர்களுள் ஒருவராக ஹசன் நஸ்ரல்லாஹ் மாறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்