இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 32 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது
1 month ago




இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 32 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையின் மன்னார் கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி உள் நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 32 இந்திய மீனவர்களே இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 இந்திய மீனவர்களும் 05 ட்ரோளர் படகில் இழுவை மடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டதோடு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி கடற்படை தளத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட 32 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
