நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்ய முயலும் தலைவர்களை தெரிவு செய்தால் ஆபத்து! கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து அவற்றை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும் தலைவர்களைத் தெரிவு செய்வதனால் பாதிப்பே ஏற்படக்கூடும் எனக் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ராகம - தேவத்தை - பசிலிக்கா தேவாயலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங் களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார். தேர்தல் காலங்களில் பொது மக்கள் தயவுசெய்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தங்களது சுயலா பத்துக்காக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் மற்றும் போலியான தகவல்களை எமது தலைவர்கள் வழங்கி வருவதாகவும், கடந்த 75 வருட காலமாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுடன, தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்று நாட்டின் பெரும்பாலானோர் தமது கொடுப்பனவிற்கேற்ப வாழ்க் கையை முன்கொண்டு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் வளம் பகிர்ந்த ளிக்கப்படும் வகையிலான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரி னார்.