யாழ்.பருத்தித்துறை வடக்கு கடற்பரப்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் சூட்டுப் பயிற்சி

1 month ago



யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது எதிர்வரும் 02 ஆம் திகதி காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே இலங்கை கடற்படை கப்பல்களான பி - 423, பி - 433, பி- 483 ஆகிய கலங்களிலிருந்து சூட்டுப்பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட கடற் பிரதேச எல்லைக்குள் கடற்றொழிலாளர்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு யாழ். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப்            பணிப்பாளரால் அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்