சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைக்கு நீதி கோரி போராடிய முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோர் கைது
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தி யசாலையில் செயல்பாடுகளை வைத்தியர்கள் சிலர் குழப்பி வரும் நிலையில் வைத்தியசாலை செயல் பாடுகளை உரிய முறையில் மேற் கொள்ள வேண்டும் என ஜனநாயக வழியில் போராடியவர்களில் ஒருவரை கைது செய்து மற்றவர்களை எச்சரிக்கை செய்து அப் பகுதியில் இருந்து அகற்றியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மேலும் தெரிய வருவ தாவது,
அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலை நோயாளிகள் நலன் கருதி சில அதிரடி நடவடிக் கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றி இருந்தது.
இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லுகின்ற நோயாளிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
இதனால் தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நேற்று முற்பகல் வைத்திய சாலைக்கு வருகை தந்திருந்த மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து நிர்வாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம் பிக்க வேண்டும். இல்லையேல் பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிப்பதற்காக வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தனர்.
இதனையடுத்து அங்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தவர்களை அச்சுறுத்தி அகற்ற முற்பட்டனர். இதன் போது அமைதியான முறையில் நாங்கள் மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க கோரிக்கை முன்வைக்கவே எந்தவித இடையூறு களும் செய்யாமல் இருக்கின்றோம். ஆகவே எம்மை கலைந்து செல்லுமாறு கூற முடியாது என்று தெரிவித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோரை பொலிசார் கைது செய்தனர்.
ஏற்கனவே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பு வைத்தியரை வைத்தியசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மதிவாணன்,மயூரன் போன்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்களை சாவகச்சேரி பொலிஸார் ஏன் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசா லைக்கு உடனடியாக விரைந்த மனித உரிமை இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் பிராந்தி இணைப்பாளர் பொது மக்களோடும் வைத்தியசாலை நிர்வாகத்தோடும் கலந்துரையாடியதோடு உடனடியாகவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட முன்னாள் நகர சபை உறுப்பினரையும் பார்வையிட்டார்.
இதனை அடுத்து சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை யில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.