தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் குழப்பம்

5 months ago


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவரை தெரிவு செய்வதில் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் காலமானமையை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது.

இந்தப் பதவிக்கு தம்மைத் தெரிவு செய்யும்படி கோரி ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கல நாதன் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த புதன்கிழமை தமிழரசு கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவா னவர்களின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சித்தார்த்தனைத் தவிர ஏனையோர் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் மேற்படி தலைமைப் பதவிக்குத் தன்னுடைய பெயரை செல்வம் அடைக்கலநாதன் தாமே பிரேரித்தார்

அதுகுறித்து சிறிதரன் எம்.பி செல்வம் அடைக்கலநாதனை நியமிக்க ஆதரவு தெரிவித்தார். செல்வத்தை பாராளுமன்ற குழுத் தலைவராக நியமித்தால் பிள வுண்டு போயுள்ள கூட்டமைப்பை மீண்டும் ஒற்றுமைப்படுத்த வழி ஏற்படும் என்று கூறினார். ஆயினும் இதனை சுமந்திரன் எதிர்த்தார். இந்த முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார். பாராளுமன்றக் குழுத் தலைவராக செல்வத்தை நியமிக்க சாணக்கியன் எம். பியும் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

"செல்வம் தலைவராக இருப்பதில் ஆட்சேபனை ஏதுமில்லை. அவர் தலைவராக இருக்க, இதுவரை காலமும் இப் பணியை சம்பந்தன் சார்பில் ஆற்றி வந்த சுமந்திரனே அவற்றைத் தொடர்ந்து செய்யலாம்.

இருவரும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்க முடியும். முன்னெடுக்க வேண்டும். ஆயினும், செல்வமும் ஏனையோரும் இப்போது ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி என்ற ஒரு புது கூட்டமைப்பை உருவாக்கி அதில் செயற்படுகின்றனர் என அறி வித்திருக்கிறார்கள்.

அவர்கள் அதில் இருந்து கொண்டு இங்கு தமிழரசு கட்சியின் பெயரில் இருக் கும் நாடாளுமன்ற குழுவுக்கு தலைமை தாங்க முடியாது. கூட்டமைப்பில் இருந்து கொண்டு தலைமை தாங்குவது வேறு. வேறு ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இதற்குத் தலைமை தாங்குவது வேறு.

அப்படி அவர்கள் தலைமை தாங்குவ தானால் அது குறித்து தமிழரசுக் கட்சி யில் கட்சி ரீதியாக நாங்கள் சில விடயங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்."- என்று சிறிதரன் தெளிவாக வலியு றுத்தினார்.

சுமந்திரனும் அக்கட்சியின் ஏனை யோரும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

கூட்டமைப்பின் பெயரில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பை இணைத்துக் கொள்வதில் சிறிதரன் கடுமையான ஆட்சபனைகளை கலந்துரையாடலில் வெளிப்படுத்தினார்.

தங்களுடைய ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியை கைவிட்டு வர முடியாது, அதன் பெயரிலேயே செயற்படுவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை செல்வம் தரப்பினர் வெளிப்படுத்தியமையால் தலைவர் தெரிவு முடிவெடுக்கப்படாமல் தள்ளிப் போயிற்று.

இறுதியில் தமிழரசுக் கட்சி, கட்சி ரீதியாக கூடி இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனை நாடாளுமன்ற குழுவின் தலைவராக நியமிக்க தமிழரசுக் கட்சியில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. 

அண்மைய பதிவுகள்