









தேசிய தைப்பொங்கல் விழா இன்று (18) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
முன்னதாக தெல்லிப்பளை துர்காதேவி தேவஸ்தானத்தில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வரை சென்று அங்கு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன் போது இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, யாழ்ப்பாண துணைத்தூதுவர் சாய் முரளி, புத்தசாசன் கலாச்சார அமைச்சர் கலாநிதி ஹனிதும சுணில் செனவி, கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர்களான மகிந்த ஜெயசிங்க, சுந்தரலிங்கம், பிரதி அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஶ்ரீபாவனந்தராஜா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சைவநெறிச்சுடர் என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதேவேளை நிகழ்வின் ஆரம்பத்தில் நேற்று (17) மறைந்த கலைப்பேராளுமை, ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கத்திற்கு (குழந்தை) புத்தசாசன அமைச்சரால் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலியும் செலுத்தப்பட்டது
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
