யாழ்ப்பாணம் செம்மணிக்கு அருகாக. சந்தேகத்துக்கு இடமான வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.




யாழ்ப்பாணம் செம்மணிக்கு அருகாக. சந்தேகத்துக்கு இடமான வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அரியாலை சிந்துபாத்தி மயானத்தில் மின்தகன எரியூட்டி அமைப்பதற்காக ஒப்பந்தமொன்று வழங்கப்பட்டிருந்தது.
ஒப்பந்தக்காரர்கள் கட்டுமானப் பணிகளுக்காக நேற்றுமுன்தினம் நிலத்தைத் தோண்டியபோதே, வெறும் ஒன்றரையடி ஆழத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நல்லூர்ப் பிரதேச சபைக்கு ஒப்பந்தக்காரர்களால் அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த நல்லூர்ப் பிரதேசசபைச் செயலாளர். பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், மயானசபை உறுப்பினர் ஆகியோர் மனித எச்சங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
இதையடுத்து, ஒப்பந்தக்காரர்கள் தொடர்ந்தும் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நல்லூர்ப் பிரதேச சபை செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:-
சிந்துபாத்தி மயானத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு எச்சங்களே மீட்கப்பட்டன.
நான் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கூறினேன் எனினும் ஒப்பந்தக்காரர் மறுத்துவிட்டார்.
மயான அபிவிருத்திச் சபை ஒப்பந்தத்தின் தொடர் பணிகளை மேற்கொள்ளும்.
இந்த மயானத்தில் கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளன.
ஆதலால், இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
