யாழ்.காரைநகரில் 216 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

4 weeks ago



216 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

51 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, காரைநகர்ப் பகுதியில் வைத்து சாவகச்சேரி, மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் இந்தக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை          மேற்கொள்ளப்பட்ட கைது      நடவடிக்கையின் போது 216 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சா மற்றும் ஒரு படகு என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சான்றுப் பொருள்களுடன் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.