வடக்கு மாகாணத்தின் கடந்த 200 ஆண்டு கால காலநிலை வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த மே மாதம் நிகழ்ந்துள்ளது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் மே மாத சராசரி மழைவீழ்ச்சி 90 மில்லி மீற்றர் ஆகும். மே மாத மழை நாட்கள் சராசரியாக 6 ஆகும்.
ஆனால் இவ்வாண்டு மாதம் முடிவடைய இன்னமும் 10 நாட்கள் உள்ள நிலையில் இடம் சார்ந்த ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாகாண சராசரி என்ற வகையில் இன்று வரை 230 மில்லி மீற்றர் மழை கிடைத்துள்ளது.
இம்மாத இறுதியில் இதன் அளவு இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாதத்தின் இதுவரையான நாட்களில் 12 நாட்கள் மழை கிடைத்துள்ளது.
ஒப்பீட்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள், யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பகுதிகள் அதிக அளவிலான மழை வீழ்ச்சியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
