இந்திய அரசும், இலங்கை அரசும் பேச்சுகளை நடத்தி கச்சதீவு பகுதியில் குத்தகை அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய மீன்வளத்துறை அமைச்சரிடம் இழுவைமடி படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரையில் நடைபெற்ற தேசிய மீன் விவசாயிகள் கருத்தரங்கில் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார். இதன் போதே அமைச்சரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.