நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் இன்று கையளித்தார்.
நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்.
சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று (19/09/2024) தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் , வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
நெடுந்தீவு இறங்குதுறைக்கு சென்ற ஆளுநர், படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமது தீவில் நீண்ட காலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில், கௌரவ ஆளுநருக்கு நெடுந்தீவு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நெடுந்தாரகை பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காக துரித நடவடிக்கையை மேற்கொண்ட மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும், துறைசார் அமைச்சுக்கும் இதன்போது வடமாகாண ஆளுநர் நன்றியை தெரிவித்தார்.
தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்,
இன்று முதல் பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் நெடுந்தீவில் இருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்குதுறைக்கு பயணிக்க உள்ளது. நெடுந்தாரகை படகில் ஒரு தடவையில் 80 பேர் பயணிக்க முடியும்.