காஸா பகுதியில் போலியோ வைரஸின் திரிபு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
8 months ago

மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் திரிபு, காஸா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் இந்த வைரஸின் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், அந்த நபர்களுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் பாலஸ்தீனியர்கள் பெரும் ஆபத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பும் காஸாவின் சுகாதார அமைச்சக அதிகாரிகளும் கூறுகின்றனர்.
போலியோ வைரஸின் திரிபு VDPV2 என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கான் யூனிஸ் மற்றும் டெய்ரா அல்-பலா ஆகிய இடங்களில் சேகரிக்கப்பட்ட 6 மாதிரிகளில் இந்த வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
