வின்ஸ்டன் சர்ச்சிலின் சின்னமான 'உறுமும் சிங்கம்' உருவப்படம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரு டப்பட்ட பின்னர், பெயார்மொன்ட் சட்டே லோரியவில் விரைவில் மீண் டும் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதத்தின் பிற்பகுதியில், பொக்கிஷமான அந்தப் புகைப்படத்தை மீட்டெடுப்பதற்காக, இரண்டு புலனாய்வாளர்கள் இத்தாலியின் ரோம் நகருக்குச் செல்வார்கள் என்று ஒட்டாவா பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
புகழ்பெற்ற கனேடிய புகைப்படக் கலைஞர் யூசுப் கர்ஷலினால் எடுக் கப்பட்ட உருவப்படம், டிசம்பர் 25, 2021 மற்றும் ஜனவரி 6, 2022 க்கு இடைப்பட்ட காலத்தில் ஹோட்டலின் லாபியில் இருந்து திருடப்பட்டது.
ஆனாலும், ஆகஸ்ட் 2022 இலேயே திருடப்பட்டமை கண்டறியப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் மிகவும் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட படங் களில் ஒன்றான அந்த படம், ஒரு போலி நகலால் மாற்றப்பட்டிருந்தது.