ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார்.
6 months ago

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார்.
அந்த விசேட வர்த்தமானியில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்பின் 70ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைவாகவும் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட் டத்தின் 10ஆம் பிரிவின் ஏற்பாடுகளை பின்பற்றி யும் 2024 செப்ரெம்பர் 25ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைத்து, 2024 நவம்பர் 21ஆம் திகதி பாராளு மன்றத்தை கூட்டவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அத்து டன், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் திகதியாக நிர்ணயிக்குமாறும் ஒக்ரோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
