தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பங்களாதேஷை சேர்ந்த இந்துக்கள், இந்தியாவுக்குள் நுழைய எல்லைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் இந்திய எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பங்களாதேஷில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தின. இதில் 560 பேர் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்த னர். மாணவர்கள் போராட்டம் ஓய்ந்தாலும் பங்களாதேஷ் முழு வதும் இந்துக்கள் மீதும் தொடர்ச் சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 17,000 இந்துக் குடும்பங்கள் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவின் மேற்குவங்கம், திரிபுரா, அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ளன. இந்த 5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பங்களாதேஷ் இந்துக்கள் குவிந்து வருகின்றனர்.
இதேவேளை, பங்களாதேஷில் 32 சதவீதமாக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை தற்போது 8 சதவீதமாக குறைந்திருக்கிறது.
இந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த பங்களாதேஷ் இடைக்கால அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.