வடக்கில் உள்ள 52 கமநல சேவை நிலையங்களில் 500 உழவு இயந்திரங்கள் பயன்பாடின்றி காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் உள்ள 52 கமநல சேவை நிலையங்களில் இந்திய அரசின் நன்கொடையின் கீழ் வழங்கப்பட்ட 500 வரையான உழவு இயந்திரங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பயன்பாடுகளும் இன்றி காணப்படுகின்றது.
குறித்த உழவு இயந்திரங்களை விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வடக்கு மாகாணத்திற்குட்பட்ட வவுனியா, மன்னார், கிளிநொச்சி,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு விவசாய சேவை மையங்களில் ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 500 வரையான உழவு இயந்திரங்கள் உள்ளன.
விவசாயிகள் இலவசமாக அல்லது தவணை அடிப்படையில் குறித்த உழவு இயந்திரங்களை கோரினர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபையால் உழவு இயந்திரங்களின் உரிமை விவசாய சேவை மையங்களுக்கு மாற்றப்படவில்லை.
கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி விவசாய சேவை மையங்களால் நடத்தப்பட்ட ஏல உரிமை முறையாக மாற்றப்படவில்லை.
விவசாய சேவைக் குழுக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகளுக்கு நன்கொடை அளிக்கவோ அல்லது விற்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உழவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விவசாயிகளின் தேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல் விற்பனை செய்து விட்டு பணத்தினை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.