கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இந்த வாரம் கடாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
3 months ago
கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இந்த வாரம் கடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரண்டு நாள் பயணமாக அவர் கடாவிற்கு வருகை தருவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தனது முதல் அதிகாரப்பூர்வ கனடா விஜயத்தின் போது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க உள்ளார்.
காஸா மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைனில் நிலவும் நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல மாதங்களாக முயற்சித்து வருகின்றன.
அல் தானியின் வருகை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பிற முன்னுரிமைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக அமையும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.