கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றுக்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

4 hours ago



கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றுக்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 20 வீதமானவர்கள் கடன் அட்டை மூலம் பெற்றுக் கொள்ளும் கடன் தொகை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட நுகர்வோர் குறித்த அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 18 வீதமான கனடியர்கள் அதிகளவு கடனைப் பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிகளை ஈடுசெய்யும் நோக்கில் அவர்கள் இவ்வாறு கடன் பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கருத்து கணிப்பின் போது தாம், கூடுதலாக கடன் பெற்றுக் கொள்ள உத்தேசித்துள்ளதாக கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த அறிக்கைகள் புள்ளிவிவர தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.