வடமாகாணத்தில் கடந்த வருடம் 34 படுகொலைகள் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவிப்பு

2 months ago



இலங்கை வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் 34 படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின், மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக அவர் இந்தத் தகவலை வழங்கியுள்ளார்.

இதன்படி, வடமாகாணத்தில் கடந்த வருடம் 34 படுகொலைகள் பதிவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"மேலும் கடந்த வருடம் வடக்கு மாகாணத்தில் 255 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. 70 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால மேலும் தெரிவித்துள்ளார்.


கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி ' முதல் டிசெம்பர் 13ஆம் திகதி வரையி "லான காலப்பகுதியில் பதிவாகிய தரவுக 'ளின் அடிப்படையிலேயே இந்தத் தகவல் கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.


(1-8-125)