பீடி இலைகளுடன் மன்னார், வங்காலையில் மூவர் கைது!

6 months ago


மன்னார், வங்காலை பகுதியில் 2 ஆயிரத்து 888 கிலோகிராம் பீடி இலைகளைக் கடத்திச் செல்ல முயன்ற மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது 80 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகளை பொலிஸார் கைப்பற்றினர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக் கப்பட்டது.