எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார நடவடிக்கைகளுக்காக கொழும்பு மாவட்டத்தில் 1200 அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்து நாட்களுக்குள் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் புரட்சியை ஏற்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியடையச் செய்வதற்கு தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
