மன்னாரில் வனப் பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்கு விடுவிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான தடையை உயர்நீதிமன்றம் நீடிப்பு
5 months ago

மன்னார் - விடத்தல்தீவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் ஒரு பகுதியை இறால் பண்ணை அமைப்பதற்காக விடுவிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் நீடித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விடத்தல்தீவு பாதுகாப்பு வனப் பகுதியிலிருந்து 168 ஏக்கர்களை விடுவிப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் மீதான தடையே நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எஸ். துரைராஜா, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஜனக் டி சில்வா ஆகியோரின் அமர்வு விசாரித்தது.
இதன்போதே இந்த வர்த்தமானி அறிவிப்பு மீதான தடையை எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
