தமது காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி பல பதாகைகளை தாங்கியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திருகோணமலை பிரதேச செயலகம் முன்பு பதற்றம் ஏற்பட்டது.
திருகோணமலை முத்துநகர் பிரிவிலுள்ள உப்புவெளி கமநல அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட சுமார் 1600 ஏக்கர் வயல் காணி திடீரென சோலார் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டதை கண்டித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1200 விவசாயிகள் குறித்த விவசாய நிலங்களை பயிர்ச் செய்கைக்கு பயன்ப டுத்தி வருகின்றனர்.
இதற்குள் 5 நீர்ப்பாசன குளங்களும் அடங்குகின்றன.
கடந்த வருடம் துறைமுக அதிகார சபையினர் சில பகுதிகளை தங்கள் பிரதேசம் என்று அடையாளப்படுத்தினர்.
அதேவேளை, தனியார் காணிகளும் இங்குள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் திடீரென்று துறைமுக அதிகார சபையினர் அந்த நிலங்களை சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனத்துக்கு விடுவிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தல் கிடைத்திருக்கின்றது.
இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இந்த நிலையிலேயே நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.